வருசம் 26 : குஷ்புவின் ப்ளாஷ்பேக்!
பிப் 23, 2021
Advertisement
வருசம் 16 படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை குஷ்பு. கோயில் கட்டி ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு தமிழ் சினிமாவில் தனக்கென நிரந்தர இடம் பிடித்தவர். தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டிருக்கிறார்.
கடந்த 2000ஆம் ஆண்டு இயக்குனரும், நடிகருமான சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் குஷ்பு. அவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். தற்போது நடிப்பு மட்டுமின்றி அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் தன்னிடம் சுந்தர் சி காதலை தெரிவித்து 26 ஆண்டுகள் ஆகி விட்டதை மகிழ்ச்சியுடன் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் குஷ்பு. அந்தப் பதிவில் அவர், "சுந்தர் சி காதலைத் கூறி இன்றுடன் 26 ஆண்டுகள் ஆகிறது. அப்போது எது உங்களது காதலை உடனே ஏற்க வைத்தது என்று எனக்கு தெரியவில்லை. அந்த மாதிரியான நேரத்தில் உள்ளுணர்வை நம்பி எடுக்கும் முடிவு சிறப்பாக அமையும். அதையேதான் நானும் செய்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!