
திரையுலகில் கார்த்தியின் 14 ஆண்டுகள்
2007ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி கார்த்தி கதாநாயகனாக அறிமுகமான "பருத்தி வீரன்" படம் வெளிவந்தது. முதல் படத்திலேயே கிராமத்துக் கதாபாத்திரத்தில் நடித்து தனி முத்திரை பதித்தார் கார்த்தி. ஆனால், அவருடைய இரண்டாவது படம் வெளிவர ஏறக்குறைய மூன்று வருடங்களாகிவிட்டது.
“ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, மெட்ராஸ், கொம்பன், தோழா, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், கைதி” என இதுவரையில் தான் நடித்த 19 தமிழ்படங்களில் விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சினிமாவில் அறிமுகமான 14 வருடங்களில் 19 படங்களில் தான் நடித்திருக்கிறார் என்பது ஆச்சரியமானதுதான். அவர் நடித்து முடித்துள்ள "சுல்தான்" படம் விரைவில் வெளியாக உள்ளது. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் சரித்திரப் படமான "பொன்னியின் செல்வன்" படத்தில் நாயகர்களில் ஒருவராக நடித்து வருகிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!