
நட்புக்காக சரத்குமார் தோற்றத்தில் கே.எஸ்.ரவிக்குமார்
இப்படத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் தர்ஷன் மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் யோகிபாபு, மனோபோலா, மாரியப்பன், ப்ராங் ஸ்டார் ராகுல் ஆகியோரும் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. தற்போது கூகுள் குட்டப்பன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரில் கேஎஸ் ரவிக்குமார், தர்ஷன், யோகிபாபு, லாஸ்லியா ஆகியோருடன் ரோபோவும் இடம் பெற்றுள்ளது.
கே.எஸ்.ரவிக்குமாரின் வித்தியாசமான இயல்பான தோற்றத்துக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. அவர் இயக்கத்தில் வெளியான நட்புக்காக படத்தின் சரத்குமார் தோற்றத்தை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!