
அண்ணாத்த படத்தில் அண்ணன் - தங்கை சென்டிமென்ட் பாடல்
அண்ணாத்த படத்தின் கடைசி 15 நாள் படப்பிடிப்பு விரைவில் தொடங்கயிருக்கிறது. ரஜினி, மீனா உள்பட பலரும் டப்பிங் பேசி முடித்துவிட்டார்கள். குஷ்பு இப்போது டப்பிங் பேசிக்கொண்டிருக்கிறார். படத்தில் அண்ணன் - தங்கை பாசம் மிளிர வைக்கும் ஒரு அழகான பாடலும் இருக்கிறது என்கிறார்கள். அதன் ஷூட்டிங்கும் ஐதராபாத்தில் தான் நடந்து முடிந்திருக்கிறது. கோல்கட்டா செல்ல இருந்த படக்குழு கொரோனா பரவலால் தங்கள் திட்டத்தை மாற்றி லக்னோவில் படம் பிடிக்க இருக்கிறது. இன்னும் சில தினங்களில் லக்னோ புறப்படும் படக்குழு, இம்மாத இறுதியில் தான் சென்னை திரும்புகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!