
அடுத்த ஆண்டில் சர்தார் 2 படத்தில் நடிக்கும் கார்த்தி
டிச 20, 2023
Advertisement
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்த தீபாவளி அன்று வெளியான படம் சர்தார். அவர் இரண்டு வேடங்களில் நடித்திருந்த இந்த படம் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது. இந்த நிலையில் தற்போது சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதை பணிகளை முடித்துவிட்ட இயக்குனர் பி.எஸ்.மித்ரன் அப்படத்தை இயக்க தயாராகி விட்டார். தற்போது நலன் குமாரசாமி இயக்கும் வா வாத்தியாரே மற்றும் பிரேம்குமார் இயக்கும் படங்களில் நடித்து வரும் கார்த்தி இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சர்தார் 2 படத்தில் நடிப்பதற்கு கால்சீட் கொடுத்துள்ளாராம். முதல் பாகத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர் நிறுவனமே சர்தார்- 2 படத்தையும் தயாரிக்க உள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!