
டிமாண்டி காலனி 2 மிரட்டலான படம் : இசையமைப்பாளர் சாம் சி.எஸ்
இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த வாரம் வெளியானது. முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாகவும் விஎப்எக்ஸ் காட்சிகளும் அதில் இடம்பெற்றது. இந்நிலையில், டிமான்டி காலனி -2 படம் குறித்து இசையமைப்பாளர் சாம் சி.எஸ் கூறுகையில், ஒரு இறையை தவறவிட்ட மிருகத்திற்கு தான் அடுத்த இறையில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்று தெரியும். அது போல் தான் கலைஞர்களும் ஒரு படைப்பில் தோற்றுப் போகிறவர்கள் அடுத்த படைப்பில் கவனமாக இருப்பார்கள்.
இந்த டிமான்டி காலனி -2 படத்தை அஜய் ஞானமுத்து கவனமாக பார்த்து பார்த்து படமாக்கி இருக்கிறார். இந்த படத்தில் பணியாற்ற வேண்டும் என்பதற்காக சில படங்களில் நான் கமிட்டாகவில்லை. இந்த டிமான்டி காலனி-2 படம் முதல் பாகத்தை விட இன்னும் அதிரடியாக வந்திருக்கிறது. பல காட்சிகள் பயங்கரமாக உள்ளன. இந்த படத்தின் காட்சிகளைப் பார்த்து நானே பயந்து விட்டேன். அதனால் இந்த படத்தை இசையோடு கலந்து பார்க்கும் போது ரசிகர்களுக்கு இன்னும் பீதியை கொடுக்கும் வகையில் இருக்கும் என்கிறார் சாம் சி.எஸ்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!