16 வருடங்களை நிறைவு செய்த கார்த்தி
பிப் 23, 2023
Advertisement
அமீர் இயக்கத்தில் 2007ல் வெளியான "பருத்தி வீரன்" படம் திரைக்கு வந்து இன்றுடன் 16 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. அப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான கார்த்தி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார்.
அவர் நடித்து கடந்த வருடம் வெளிவந்த "விருமன், சர்தார், பொன்னியின் செல்வன்" ஆகிய மூன்று படங்களும் வெற்றிப்படங்களாக அமைந்தன. சர்தார் 100 கோடி வசூலையும், பொன்னியின் செல்வன் 500 கோடி வசூலையும் கடந்தது. தற்போது "ஜப்பான்" படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.
வாரிசு நடிகர்கள் சினிமாவில் அறிமுகம் ஆனாலும் திறமை இருந்தால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும். கடந்து 16 வருடங்களில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார் கார்த்தி.
இந்த வருடத்தில் அவர் நடித்து வரவுள்ள பொன்னியின் செல்வன் 2, ஜப்பான் படங்கள் மீது எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. இன்று தனது 16வது வருடத்தை கொண்டாடி வரும் கார்த்திக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!