விபத்தில் காலை இழந்த கன்னட இளம் நடிகர்
ஜூன் 27, 2023
Advertisement
கன்னட சினிமாவை சேர்ந்த இளம் நடிகர் சூரஜ் குமார்(24). கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் உறவினரான இவர் மைசூரில் இருந்து ஊட்டிக்கு பைக்கில் சென்றுள்ளார். மைசூர் - குண்ட்லுப்பேட்டை நெடுஞ்சாலையில் பேகுர் என்ற இடம் அருகே டிராக்டரை முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர், மைசூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இவரது உயிரை காப்பாற்றும் பொருட்டு பலத்த காயமடைந்த அவரின் வலது காலை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றினர்.
சூரஜ் குமார் சினிமாவிற்காக தனது பெயரை துருவன் என மாற்றினார். அவர் நடித்துள்ள "பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா" என்ற படம் சில பிரச்னைகளால் ரிலீஸாவதில் தாமதமாகி உள்ளது. அடுத்து சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த சூழலில் அவர் கால்களை இழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் கன்னட திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!