கங்குவா படத்தில் இணைந்த நாட்டுக் கூத்து நடன இயக்குனர்
Advertisement
Advertisement
கங்குவா படத்தில் இணைந்த நாட்டுக் கூத்து நடன இயக்குனர்
ஜூன் 27, 2023
அ நிறம் | அளவு
Advertisement
சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி நடித்து வரும் கங்குவா படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. சூர்யா இதுவரை நடித்த படங்களில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகிறது. இதில் சூர்யா 10க்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார். இப்படியான நிலையில் தற்போது கங்குவா படத்தின் பாடல் காட்சி ஒன்று கொடைக்கானலில் படமாக்கப்பட்டு உள்ளது. சூர்யாவுடன் இணைந்து 500க்கும் அதிகமான நடன கலைஞர்கள் இடம் பெற்ற இந்த பாடல் காட்சிக்கு ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டுக்கூத்து என்ற பாடலுக்கு நடனம் அமைத்த பிரேம் ரக்ஷித் நடனம் அமைத்துள்ளார். ஆஸ்கர் விருது பெற்ற பாட்டுக்கு நடனம் அமைத்தவர், சூர்யா பட பாடலுக்கும் நடனம் அமைத்திருப்பதால் இந்த பாடலுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!