காதலிக்க நேரமில்லை படப்பிடிப்பு நிறைவு
மே 28, 2024
அகிலன், இறைவன், சைரன் என தொடர் தோல்வி படங்களை தந்து ரசிகர்களை ஏமாற்றத்திற்கு ஆளாக்கியுள்ளார் நடிகர் ஜெயம் ரவி. தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் "காதலிக்க நேரமில்லை" என்கிற படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் முதன்மைத் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் லால், வினய், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முழு நீள காதல் படமாக உருவாகும் இப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு நடந்து வந்தது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு கர்நாடகாவில் 10 நாட்கள் நடைபெற்றது. இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்துள்ளனர். இதை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!