ஜோரா கைய தட்டுங்க : யோகி பாபு நடிக்கும் காமெடி படம்
மே 28, 2024
Advertisement
2013ம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற படம் "தீக்குளிக்கும் பச்சை மரம்". மருத்துமனை பிணவறையில் பணியாற்றுபவர்களின் வாழ்க்கை பின்னணியில் இந்த படம் உருவாகி இருந்தது. இதனை எம்.வினீஸ் இயக்கி இருந்தார். மது அம்பாட் ஒளிப்பதிவு செய்திருந்தார். பிரஜன், சரபு நடித்திருந்தார்கள்.
11 வருடங்களுக்கு பிறகு வினீசும், மது அம்பாட்டும் இணைந்து உருவாக்கி உள்ள படம் "ஜோரா கைய தட்டுங்க". இதனை வாமா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜாஹிர் அலி தயாரித்துள்ளார். யோகி பாபு கதையின் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் ஹரீஷ் பேரடி, விக்ரம் புகழ் வாசந்தி, ஜாஹிர் அலி, மணிமாறன், சாந்தி தேவி, மேனகா, நைரா, அருவி பாலா, மூர், ஶ்ரீதர் ஆகியோர் நடித்துள்ளனர். எஸ்.என்.அருணகிரி இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி வினீஷ் கூறும்போது, “இது முழுக்க முழுக்க ஜாலியான படம். யோகி பாபுவின் திரை பயணத்தில் இத்திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் . படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து மற்ற பணிகள் நடந்து வருகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார்” என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!