
ஒசாகா திரைப்பட விருதுகள் அறிவிப்பு : பொன்னியின் செல்வனுக்கு 7, விக்ரமிற்கு 8
2022ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது "விக்ரம்" படத்தில் நடித்த கமல்ஹாசனுக்கும், சிறந்த நடிகை விருது "சாணிக்காயிதம்" படத்தில் நடித்த கீர்த்தி சுரேசுக்கும் வழங்கப்படுகிறது. இதுபோல் சிறந்த இயக்குனர் விருது பொன்னியின் செல்வன் படத்திற்காக மணிரத்னத்திற்கும், சிறந்த இசையமைப்பாளர் விருது "விக்ரம்" படத்திற்காக அனிருத்திற்கும் வழங்கப்படுகிறது.
சிறந்த திரைப்படமாக "விக்ரம்" தேர்வாகி உள்ளது. சிறந்த வில்லன் விருது "விக்ரம்" படத்தில் நடித்த விஜய்சேதுபதிக்கு வழங்கப்படுகிறது. சிறந்த துணை நடிகர் விருதை "விக்ரம்" படத்தில் நடித்த பஹத் பாசில் பெறுகிறார். சிறந்த துணை நடிகைக்கான விருதை "பொன்னியின் செல்வன்" படத்தில் நடித்த ஐஸ்வர்யாராய் பெறுகிறார்.
இந்த பட்டியலில் பொன்னியின் செல்வனுக்கு 7 விருதுகளும், விக்ரம் படத்திற்கு 8 விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. "லவ் டுடே" படத்திற்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!