
ரகசியத்தை தெரிந்து கொள்வதற்காக பஹத் பாசிலுடன் பணியாற்ற விரும்புகிறேன் : ராஜமவுலி
அந்த வகையில் ஒரு நிகழ்ச்சியில் பஹத் பாசில் குறித்து அவர் பேசும்போது, "பஹத் நடித்த ட்ரான்ஸ் திரைப்படமும், ஆவேசம் திரைப்படமும் எனக்கு ரொம்பவே பிடித்தமானவை. அதேசமயம் பஹத் பாசில் நடித்த ஜோஜி திரைப்படத்தை பார்த்த பிறகு அவருக்கு ஒரு மெசேஜ் அனுப்பினேன். அதில், "நீங்கள் ஒரு நச்சுப் பாம்பைப் போன்றவர்; இந்த படத்தை நிறுத்த வேண்டும் என நினைத்தேன், ஆனால் எப்படி நிறுத்துவது என்று எனக்கு தெரியாமல், அந்த அளவுக்கு இந்தப் படம் என்னை கட்டிப்போட்டுவிட்டது" என கூறி இருந்தேன்.
நான் எப்போதுமே அவரிடம் சொல்வதுண்டு. நான் அவரை வெறுக்க விரும்புகிறேன், ஆனால் அவர் மீது எனக்கு பாசம் உள்ளது. பஹத் பாசில் தனது கதாபாத்திரங்களை எப்படி உள்வாங்கிக் கொண்டு நடிக்கிறார் என்பதன் ரகசியத்தை நேரில் தெரிந்து கொள்வதற்காகவே அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார் ராஜமவுலி.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!