ஜனநாயகன் முன்பதிவு குறைந்தது : வசூல் 200 கோடி கடந்தது…
ஜூலை 29, 2026
Advertisement
விஜய்யின் கடைசி படமான "ஜனநாயகன்" கடந்த வாரம் ஜூலை 23ம் தேதி வெளிவந்தது. கடந்த வார இறுதி வரையிலான முன்பதிவு ஓரளவு சிறப்பாகவே இருந்ததாகத் தியேட்டர் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், வார நாட்கள் ஆரம்பமான பிறகு அது குறைந்துள்ளது.
இருப்பினும் விஜய்யின் முந்தைய படங்களைக் காட்டிலும் இப்படத்திற்கான வசூல் எதிர்பார்த்தபடி அமையவில்லை என்கிறார்கள். இந்தப் படத்தின் முதல் நாள் வசூலும் குறைவாகவே நடந்துள்ளது.
இந்நிலையில் வார இறுதி வசூலாக 200 கோடியை இந்தப் படம் கடந்துள்ளது. விஜய் நடித்து வெளிவந்த படங்களில் தொடர்ச்சியாக 200 கோடி வசூலைக் கடந்த 8வது படமாக இப்படம் அமைந்துள்ளது.
இதற்கு முன்பாக, “மெர்சல், சர்க்கார், பிகில், மாஸ்டர், பீஸ்ட், லியோ, தி கோட்” ஆகிய படங்கள் 200 கோடி வசூலைக் கடந்துள்ளன. இவற்றில் "லியோ" படம் 600 கோடி வசூலையும், "தி கோட்" படம் 400 கோடி வசூலையும் கடந்துள்ளன.
"ஜனநாயகன்" படம் 300 கோடி வசூலைக் கடக்குமா அல்லது 400 கோடி வசூலைக் கடக்குமா எனபது இந்த வார இறுதிக்குள் தெரிந்துவிடும்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!