
மயோசிடிஸ் நோய் கற்றுத்தந்த பாடம்: சமந்தா
நடிகை சமந்தா, சில ஆண்டுகளுக்கு முன்பு "மயோசிடிஸ்" எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதிலிருந்து மீண்டு வந்த அவர் பின்னர் படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் இயக்குனர் ராஜ் நிடிமொரு என்பவரை திருமணம் செய்தார். தற்போது கர்ப்பமாக இருக்கும் சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் பாதித்த மயோசிடிஸ் நோய் குறித்து பகிர்ந்துள்ளார்.
சமந்தா கூறியதாவது: மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது, என் அடையாளத்தை நான் இழந்துவிட்டது போல் உணர்ந்தேன். எனது கட்டுப்பாட்டில் எதுவும் இல்லை என்ற எண்ணம் தோன்றியது. மன உறுதி, நம்பிக்கை, எதிர்பார்ப்பு போன்ற முக்கியமான குணங்களை இந்த நோய் எனக்கு கற்றுக்கொடுத்தது. ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்க வேண்டும்? என்ற கட்டத்தைத் தாண்டி, இதிலிருந்து நான் கற்றுக்கொள்ள ஏதோ ஒன்று உள்ளது என்பதை உணர சிறிது காலம் ஆனது. இந்த நோய் எனக்கு கற்றுக்கொடுத்த பாடங்கள் என் வாழ்க்கையின் விலைமதிப்பற்ற அங்கமாக மாறிவிட்டன. இவ்வாறு அவர் கூறினார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!