
விஜய் ரசிகராக நடிக்கும் முன்னாள் திமுக எம்எல்ஏ
திருப்பரங்குன்றம் திமுக எம்ல்ஏவாக இருந்தவர் மதுரையை சேர்ந்த டாக்டர் சரவணன். பின்னர், அதிமுக, பா.ஜ.,வில் அவர் இருந்தார். இப்போது சில மாதங்களாக தவெகவில் இருக்கிறார். அவர் கதைநாயனாக நடித்து இயக்கும் படம் "வெற்றி ஐபிஎஸ்".
சென்னையில் நடந்த அந்த படவிழாவில் அவர் பேசுகையில், ""நான் இதில் போலீஸ் ஆபீசராகவும், விஜய் ரசிகராகவும் வருகிறேன். இதற்கு முன்பு "அகிலன்" என்ற படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கிறேன். இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்கிறேன். இதில் கஞ்சா கருப்பும் நடிக்கிறார்"" என்றார்.
இந்த விழாவில் கஞ்சா கருப்பு, பவர்ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர். உடல்நலக்குறைவு காரணமாக நடக்கவே சிரமப்பட்டார் பவர்ஸ்டார் சீனிவாசன், அவர் உடல்நிலை குறித்து நிருபர்கள் கேட்க, நான் இறந்துவிட்டேன் என்று கூட வதந்தி பரப்பினார்கள். நான் நன்றாக இருக்கிறேன். இப்போது அமைதியாக இருக்கிறேன். சரியான கதைகள் கிடைக்கவில்லை. ஆனாலும் 2 படங்களில் நடித்து வருகிறேன் என்றார். கஞ்சா கருப்பு பேசுகையில் என் குழந்தைகள் டாக்டர் சரவணன் ஆஸ்பிட்டலில்தான் பிறந்தார்கள். நான் அனுப்பிய பலருக்கு இலவசமாக சிகிச்சை பார்த்தார். இப்போது நான் இந்தி படத்திலும் நடிக்கப்போகிறேன் என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!