
ஜனநாயகன் லாபத்தை நோக்கி நகர வாய்ப்பு இருக்கா ?
முதல் நாள் வசூலிலேயே பெரிய அளவு வசூல் இல்லை என்பது ஆரம்ப அதிர்ச்சியாகவே இருந்தது. அந்த அதிர்ச்சி கடந்த பத்து நாட்களாகவும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
தற்போதைய நிலவரப்படி படம் 300 கோடி வசூலை நெருங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், நடைபெற்ற வியாபாரத்துடன் ஒப்பிடும் போது இன்னும் 70 கோடி வரையில் நிகர வருவாய் வர வேண்டும் என்கிறார்கள். அதற்கு படம் இன்னும் 100 கோடிக்கும் அதிகமாக மொத்த வருவாயைப் பெற வேண்டும்.
இந்த வாரம் ஆகஸ்ட் 7ல் புதிய படங்கள் வெளியாக உள்ளன. கடந்த வாரம் வெளிவந்த "ஸ்பைடர்மேன்" படம் காரணமாக "ஜனநாயகன்" ஓடிய தியேட்டர்கள் மாற்றப்பட்டன. இந்த வாரம் அது மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போதைய சூழலில் "ஜனநாயகன்" படம் லாபத்தை நோக்கிச் செல்வது மிகவும் சிரமம் என்றே சொல்கிறார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!