
ரஜினியின் ‛ஜெயிலர் 2 தள்ளிப்போகிறதா?
ஜெயிலர் 2 ஜூனில் வெளியாக வாய்ப்பில்லை. இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பாக்கி இருப்பதால் ஆகஸ்ட் மாதம் வரலாம் என்று கூறப்பட்டது. இப்போது இன்னும் தள்ளிப்போகுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ரஜினியின் 50வது சினிமா ஆண்டில் ஜெயிலர்2 வெளியாக உள்ளதாலும், அதில் பல மொழிகளை சேர்ந்த முன்னணி நடிகர்கள் நடித்துள்ளதாலும் ரிலீஸ் தேதியை பக்காவாக அறிவிக்க வேண்டும்.
அந்த தேதி மற்ற மொழிகளில் இந்த படத்துக்கு பாதிப்பு இருக்க கூடாது என்று பட நிறுவனம் நினைக்கிறதாம். அதனால், ரிலீஸ் தேதி விஷயத்தில் முடிவெடுக்கவில்லை. ஜெயிலர் 2 ஆயிரம் கோடி வசூலை ஈட்ட வேண்டும் என்று திட்டமிடுவதால் இந்த ஏற்பாடுகளாம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!