
தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா, தனி கொடியை அறிமுகப்படுத்தினாரா
இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்றத்திற்கு தனி கொடி அறிமுகப்படுத்தி உள்ளார். அவருக்கும் அரசியல் ஆசை இருக்கிறது என்று தகவல் பரவியது. அந்த கொடி சமூக வலைதளத்தில் வைரல் ஆனது. எண்ணம் போல் வாழ்க்கை, எண்ணம்போல் தான் வாழ்க்கை என்ற வாசகமும் அந்த கொடி டிசைனில் இருந்தது.
இது குறித்து தனுஷ் தரப்பில் விசாரித்தால் இது தவறான தகவல். கடந்த 13 ஆண்டுகளாக ரசிகர் மன்றம் இருக்கிறது. பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம். இப்போது திடீரென அவர் அரசியலுக்கு வருகிறார் என யாரோ கிளப்பி விட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. சிலர் காரில் அந்த கொடி கட்டி வர, சிலர் கதை விடுகிறார்கள். அந்த கொடி பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கிறது. தனுசுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றனர்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!