சோசியல் மீடியாவில் இருந்து மமிதா பைஜூ தற்காலிக விலகல்
ஜூலை 08, 2026
Advertisement
கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான "பிரேமலு" திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து மலையாளம் மற்றும் தமிழ் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றவர் மமிதா பைஜூ. தற்போது மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். விஜய்யுடன் இவர் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதேபோல சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ள "விஸ்வநாத் அண்ட் சன்ஸ்" மற்றும் மலையாளத்தில் நிவின்பாலியுடன் நடித்துள்ள "பெத்தலகேம் குடும்ப யூனிட்" ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக இருக்கின்றன. பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
ஒரு பக்கம் படங்களில் பிசியாக நடித்தாலும் சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக செயல்பட்டு வந்தார். தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் மற்றும் தன்னைப் பற்றிய பெர்சனல் விஷயங்கள் பலவற்றை ரசிகர்களிடம் பகிர்ந்து வந்தார் மமிதா பைஜூ. இந்த நிலையில், தற்காலிகமாக சில காலம் சோசியல் மீடியாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் மமிதா. அதற்கான காரணத்தை அவர் குறிப்பிடவிட்டாலும், அவரது நிர்வாகக் குழுவினர் அவரது சோசியல் மீடியா பக்கத்தைப் பராமரித்து வருவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!