
குஷ்பு மகள் திருமணத்திற்கு எனக்கு அழைப்பு இல்லை : ராதாரவி வருத்தம்
இது குறித்து அவர் கூறும்போது, "குஷ்புவும் நானும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளோம். சுந்தர்.சியின் அரசியல் பயணத்திற்கு கூட சமீபத்தில் நான் ஆதரவு தெரிவித்திருந்தேன். ஆனால், அவர்கள் இப்போது ஒரு பெரிய நிலைக்கு உயர்ந்திருக்கலாம், அதனால் என்னை அழைக்கத் தேவையில்லை என்று கருதி இருக்கலாம்" என வருத்தத்துடன் கூறியுள்ளார்.
குஷ்பு அறிமுகமான காலகட்டத்தில் சின்னத்தம்பி, உத்தமராசா, ரிக்ஷா மாமா, பாண்டித்துரை, இது நம்ம பூமி உள்ளிட்ட பல படங்களில் ராதாரவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் என்பதும், அதே சமயம் சுந்தர்.சி இயக்கத்தில் "அரண்மனை 2" உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!