
‛இம்மார்ட்டல் படப்பிடிப்பு நிறைவு
மே 20, 2026
Advertisement
மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், கயாடு லோகர் இணைந்து நடித்துள்ள படம் "இம்மார்ட்டல்". இதில் டி.எம்.கார்த்திக், லொல்லு சபா மாறன், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இளமை ததும்பும் காதல் கதையாக இப்படம் உருவானாலும் அதில் சஸ்பென்ஸ் கலந்த ஹாரர் கதையும் உள்ளது. ஒரே அபார்ட்மென்ட்டில் நடக்கும் கதையாக தயாராகிறது. ஏற்கனவே இதன் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதன் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக, பல்வேறு ஊர்களில் நடந்து வந்தது. இப்போது மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. உடனடியாக போஸ்ட் புரொடக் ஷன் பணிகளையும் துவக்க உள்ளனர். ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!