அடுத்தாண்டு ஜன., 26ல் வெளியாகும் இளையராஜாவின் சிம்பொனி இசை
அக் 31, 2024
Advertisement
"புது ராகம் படைப்பதாலே... நானும் இறைவனே..."" - இந்த வரிகள் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையா, இப்பாடலுக்காக இசையை கோர்த்த இசைஞானி இளையராஜாவுக்கு சாலப்பொருந்தும். தேனி மாவட்டம், பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்து, இசைக்கலைஞனாய் உருவெடுத்து, உலகையே தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர்.
இந்திய சினிமாவின் இசை மேதையான இளையராஜா 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் ஏற்கனவே ஒரு சிம்பொனி இசையை வெளியிட்டு இருந்தார். இப்போது இங்கிலாந்தில் தான் பதிவு செய்த சிம்பொனியை வெளியிட போகிறார். இதுதொடர்பாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள இளையராஜா, அதன் உடன், ‛இங்கிலாந்தில் நான் பதிவு செய்த முழு சிம்பொனி இசையை அடுத்தாண்டு ஜன., 26ல் வெளியிட போகிறேன். இதை இந்த தீபாவளி திருநாளில் அறிவிப்பது மகிழ்ச்சி" என குறிப்பிட்டுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!