
சாம் சி.எஸ்-க்கு ஐபா விருது
மார் 13, 2023
Advertisement
இந்திய திரையுலக கலைஞர்களுக்கு அளிக்கப்படும் சர்வதேச விருதுகளில் ஐபா எனப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விருதும் ஒன்று. சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்ற ஹிந்தி திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் ஐபா விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டிற்கு சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கான பிரிவில் விருது பெறும் கலைஞர்களின் பட்டியலை விருது குழு வெளியிட்டிருக்கிறது. அதில் சிறந்த பின்னணி இசைக்கான பிரிவில் ஹிந்தியில் வெளியான "விக்ரம் வேதா" படத்திற்காக இசையமைப்பாளர் சாம் சிஎஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். வருகிற மே மாதம் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் துபாயில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் சாம் சி. எஸ்ஸிற்கு இந்த விருது வழங்கப்படுகிறது. தமிழில் வெளியான "விக்ரம் வேதா" படத்திற்காக சாம் சி எஸ் ஸிற்கு ஏராளமான விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!