
திருமணத்துக்கு முன்பே குழந்தை பெற்றுக் கொள்ளும் நடிகை
ஜூலை 01, 2021
Advertisement
ஸ்லம்டாக் மில்லியனர் படம் மூலம் நடிகையாகி பிரபலமானவர் மும்பையை சேர்ந்த ப்ரீடா பின்டோ. அவர் தொடர்ந்து ஹாலிவுட் படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் தவிர்த்து குறும்படங்கள், ஆவண படங்களிலும் நடிக்கிறார் ப்ரீடா. அவர் புகைப்படக் கலைஞர் கோரி ட்ரான் என்பவரை காதலித்து வருகிறார். கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் கோரியின் பிறந்தநாள் அன்று இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் ப்ரீடா. அதாவது தனக்கு விரைவில் குழந்தை பிறக்கவிருக்கிறது என்பதை புகைப்படங்களுடன் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
திருமணத்துக்கு முன்பே குழந்தையா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
திருமணத்துக்கு முன்பே குழந்தையா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!