
யோகிபாபுவுடன் கிரிக்கெட் விளையாடும் விஷால்
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தற்காலிகமாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் தெலுங்கானா மாநிலத்தில் இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து அங்கு மீண்டும் விஷால் 31 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், படப்பிடிப்பின் இடைவேளையின்போது நடிகர் விஷால் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட படக்குழுவினர் கிரிக்கெட் விளையாடி இருக்கிறார்கள். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!