
குடும்ப இமேஜை உடைக்க முயற்சிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்
சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேசுக்கு அடையாளம் கொடுத்தது அட்டக்கத்தி. அதில் அவர் வடசென்னை பெண்ணாக நடித்தார். அப்படி தொடங்கியதோ என்னவோ வட சென்னை உள்ளிட்ட பல படங்களில் அவர் வடசென்னை பெண்ணாக நடித்தார். காக்கா முட்டை படம் அவரை தேசிய விருது வரை பேசவைத்தாலும். இரு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்தன் மூலம் அவரை மாஸ் ஹீரோயினாக கற்பனையில் கூட எந்த இயக்குனரும் காணவில்லை.
தனக்கு ஏற்பட்டுள்ள குடும்ப இமேஜை மாற்ற நினைக்கும் ஐஸ்வர்யா அடிக்கடி தன்னை வேறுவிதமாக மாற்றிக் காட்டும் முயற்சியாக கிளாமரான போட்டோ ஷூட்களை நடத்தி அதன் படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது அவர் வெளியிட்டிருக்கும் படங்கள் அதற்கு சிகரம் வைத்தது போன்று இருக்கிறது. கமர்ஷியல் ஹீரோயினாகவும் ஐஸ்வர்யா ஜொலிக்கும் வாய்ப்புகள் இருப்பதை இந்த படங்கள் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கை தரலாம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!