பிளாஷ்பேக் : திரைப்படமான சின்னத்திரை தொடர்
ஆக 08, 2026
Advertisement
பெரிய அளவில் வெற்றி பெற்ற சின்னத்திரை தொடர்களை சுருக்கி திரைப்படமாக தயாரிப்பது அபூர்வமாக நடக்கின்ற ஒன்று. தமிழில் அப்படி தயாரான படம் "தியாகு".
எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இப்படத்தின் கதை, பிரபல எழுத்தாளர் சிவசங்கரியால் எழுதப்பட்டது. ஏவிஎம் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் ரகுவரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிவசங்கரியின் நாவலையும், தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகி மிகுந்த வரவேற்பைப் பெற்ற "ஒரு மனிதனின் கதை" என்ற தொலைக்காட்சித் தொடரையும் அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது.
இதில் ரகுவரன், அத்தொலைக்காட்சித் தொடரில் தான் ஏற்று நடித்த அதே புகழ்பெற்ற கதாபாத்திரத்தை மீண்டும் ஏற்று நடித்தார். அவருடன் நிழல்கள் ரவி, சுதா, எஸ்பி பாலசுப்ரமணியம், ரேகா உள்ளிட்ட பலர் நடித்தனர்.
மதுவால் அழிந்து பின்பு மீண்ட ஒரு மனிதனின் கதை. போதை விழிப்புணர்வு படமாக அமைந்த இந்த படத்தை இயக்க எஸ்பி முத்துராமன் ஊதியம் எதுவும் பெறவில்லை.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!