
மீண்டும் தேசிய விருது... : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில்
நான் இளையராஜாவின் இசைக்கு பெரிய ரசிகை, அவர் இசையமைத்து அவர் பாடலுக்கு நாங்கள் ஆடியது பெருமைக்குரிய விஷயம். ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். நான் இதில் ஒரு மலையாள பெண்ணாக வருகிறேன். மீண்டும் உங்களுக்கு தேசிய விருது கிடைக்குமா என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு இந்த முறை ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் தேசிய விருது பெறட்டும் என பதில் சொல்கிறேன். இப்படிப்பட்ட படத்தில் நடிப்பது தனக்கு பெருமை. இந்தியா மட்டுமல்ல உலகளவிலும் டோரதி திரைப்படம் பேசப்படும்.
பிரபல ஒளிப்பதிவாளர் திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரியதர்ஷன் எனக்கு எப்படி குருவோ, திருவும் எனக்கு இன்னொரு குரு. என்னுடைய ஆரம்பகால படங்களில் அவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார், நிறைய அட்வைஸ் செய்வார். அப்பொழுது லட்டு உள்ளிட்ட நிறைய இனிப்புகள் சாப்பிட்டு குண்டாக இருப்பேன். அதை பார்த்துவிட்டு கண்டிப்பார். அவர் சொல்லிக் கொடுத்த பல விஷயங்களை நான் இன்றும் பாலோ செய்கிறேன் இதில் முத்துக்குமார் சிறப்பாக நடித்துள்ளார்"" என்றார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!