பிளாஷ்பேக் : இப்படியும் நடந்திருக்கு
டிச 23, 2025
Advertisement
நடிகையும், தயாரிப்பாளருமான கண்ணாம்பா 1956ம் ஆண்டு "நாக பஞ்சமி" என்ற ஒரு படத்தை தயாரித்து, நடித்தார். இந்தப் படத்தை கே.நாகபூஷனம் இயக்கினார். அஞ்சலி தேவி, எஸ்.வரலட்சுமி, சித்தூர் நாகைய்யா, தங்கவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
இந்த படத்தின் கதை அருமையாக இருந்ததால் இந்த கதையின் உரிமத்தை வாங்கி, "நாக தேவதா" என்ற பெயரில் தெலுங்கில் தயாரித்தார் ஏவிஎம் செட்டியார். இதில் நாகேந்திர ராவ், ஜமுனா, சவுகார் ஜானகி நடித்தனர். ஆர்.சுதர்சனம் இயக்கினார்.
ஏவிஎம் குறிப்பிட்ட காலத்தில் திட்டமிட்டபடி படத்தை தயாரித்து தெலுங்கில் வெளியிட்டு பெரிய வெற்றியை பெற்றது. சில பிரச்சினைகள் காரணமாக கண்ணாம்பாவால் படத்தை முடிக்க முடியவில்லை. படம் தாமதமானது. இதனால் ஏவிஎம் நிறுவனம் தாங்கள் தயாரித்த "நாக தேவதா" படத்தை "நாக தேவதை" என்ற என்ற பெயரில் தமிழில் டப் செய்து வெளியிட்டது. இங்கும் அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதன் காரணமாக தனது "நாக பஞ்சமி" படத்தை ஒரு வழியாக முடித்த கண்ணாம்பா அதனை தமிழில் வெளியிடாமல் தெலுங்கில் டப் செய்து வெளியிட்டார். அங்கு படம் வெற்றி பெறவில்லை.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!