
கன்னட சினிமா : 2026ன் 8வது மாதத்தில் முதல் 100 கோடி
அதன்பின் "கேஜிஎப் 2" படம் 2022ல் வெளிவந்து 1800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மிகப் பெரும் சாதனையைப் புரிந்தது. தென்னிந்திய சினிமாவின் தாயகம் என சொல்லப்படும் தமிழ் சினிமா கூட இப்படியான ஒரு சாதனையை இதற்கு முன்பு படைத்ததில்லை. அதை முந்திக் கொண்டு கன்னட சினிமா பெரிய சாதனையை நிகழ்த்தியது.
அதே ஆண்டில் அதற்கடுத்து வெளிவந்த "காந்தாரா" படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அதன் ப்ரிகுவல் படமாக கடந்த வருடம் வெளிவந்த வந்த "காந்தாரா சாப்டர் 1" 900 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
கடந்த சில வருடங்களில் இந்த இரண்டு படங்கள் கன்னட சினிமாவிலும் சிறந்த படைப்பாளிகள் இருக்கிறார்கள் என்பதை இந்தியத் திரையுலகத்திற்குப் புரிய வைத்தது.
இருந்தாலும் இந்த 2026ம் வருடத்தில் இதுவரையில் கன்னட சினிமாவில் குறிப்பிடும்படியான பெரிய வசூல் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. "கேடி - தி டெவில்" படம் வசூலித்த சுமார் 25 கோடி தான் அதிகபட்ச வசூலாக இருந்தது.
8வது மாதமான ஆகஸ்ட் மாத முடிவில் வெளிவந்த "டாக்சிக்" படம்தான் முதல் 100 கோடி படமாக அமைந்துள்ளது. முதல் நாளிலேயே இப்படம் 150 கோடியை வசூலித்துள்ளது. இந்தப் படம் எத்தனை 100 கோடி வசூலிக்கும், அதுவும் லாபத்தில் முடியுமா என்பதுதான் இப்போதைய கேள்வியாக உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!