பிளாஷ்பேக்: தன்னை அறிமுகப்படுத்தியவருக்காக படம் தயாரித்த இளையராஜா
ஆக 14, 2026
Advertisement
இளையராஜாவை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் பஞ்சு அருணாச்சலம். அவர்தான் "அன்னக்களி" படத்தில் அறிமுகப்படுத்தினார். இதற்காக எப்போதுமே இளையராஜா அவருக்கு நன்றியுடன் இருப்பார். பஞ்சு அருணாசலம் இயக்குனராகும் கனவோடுதான் சினிமாவிற்கு வந்தார். வந்த புதிதில் "மணமகளே வா" என்ற படத்தையும் இயக்கினார். அதன் பிறகு தயாரிப்பாளராகி விட்டார்.
ஆனாலும் அவருக்குள் அந்த இயக்குநர் ஆசை இருந்து கொண்டே இருந்தது. இதை அறிந்து கொண்ட இளையராஜா. "முதலாளி நீங்க படம் இயக்குங்க நானே தயாரித்து மியூசிக்கும் போட்டுத் தருகிறேன். ராமராஜன் தேதியும் வாங்கித் தருகிறேன், கதை மட்டும் தயார் செய்யுங்கள்" என்று கூறினார். அப்படி உருவான படம்தான் "புதுப்பாட்டு".
ஏற்கெனவே பாவலர் கிரியேசன்சை நடத்தி வந்தாலும் இந்த படத்திற்காக "இளையராஜா கிரியேஷன்" என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இளையராஜா தயாரித்தார். ராமராஜன், வைதேகி, சுமா, ராஜீவ், லிவிங்ஸ்டன், கவுண்டமணி, செந்தில், உள்ளிட்ட பலர் நடித்தனர். 10 பாடல்கள் போட்டுக் கொடுத்தார் இளையராஜா. பாடல்கள் ஹிட்டான அளவிற்கு படம் ஹிட்டாகவில்லை.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!