பிளாஷ்பேக் : கண்ணையா முன்னால் என்னத்த வந்தது எப்படி?
ஆக 21, 2024
Advertisement
சினிமாவில் பெரிய வெற்றி பெற்ற காமெடி நடிகர்கள் காலத்தை கடந்தும் பேச வைப்பார்கள். ஆனால் சின்ன சின்ன கேரக்டரில் பெரிதாக சிரிக்க வைத்துச் சென்ற காமெடியன்களை சினிமா மறந்து விடும். அப்படியானவர்களில் ஒருவர்தான் என்னத்த கண்ணையா.
இன்றைய தலைமுறைக்கு அவரை அறிமுகப்படுத்த வேண்டும் என்றால் "தொட்டால் பூ மலரும்" படத்தில் வடிவேலுவுக்கு கார் டிரைவராக வந்து "வரும் ஆனா... வராது" என்ற டயலாக் மூலம் புகழ்பெற்றாரே அவர் தான் என்னத்த கண்ணையா. அந்த காலத்திலேயே எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களில் காமெடியனாக நடித்தவர். எம்.ஜி.ஆருக்கு பிடித்த காமெடியனாக இருந்தார். இதனால் தனது படங்களில் ஒரு காட்சியாவது கொடுத்து கை நிறைய சம்பளமும் கொடுப்பார். பின்னாளில் கலைமாமணி பட்டமும் கொடுத்தார்.
1949ல் பி.யு.சின்னப்பா, எம்ஜிஆர் இணைந்து நடித்த "ரத்னகுமார்" படத்தில் கூட்டத்தில் ஒருவராக வந்தார் கண்ணையா. இதுதான் அவர் அறிமுகமான படம். 1950ல் வெளியான "ஏழை படும் பாடு" படத்தில் சிறிய வேடம் ஒன்றில் நடித்து தன்னை அடையாளப்படுத்தினார். 1955ல் இருந்து சென்னைக்கு வந்து நிரந்தரமாகத் தங்கினார்.
இவர் பெயருக்கு முன்னால் "என்னத்த" வந்தது தனி கதை. 1967ல் ரவிச்சந்திரன் நடிப்பில் வெளியான படம் "நான்". இந்தப்படத்தில் கண்ணையா எதற்கெடுத்தாலும் விரக்தியாக “என்னத்த வந்து... என்னத்த போயி...”ன்னு சொல்லிக்கொண்டே இருப்பார். இதுதான் அவரது பெயர் காரணமானது.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!