
அஜித் படத்தில் அறிமுகமாகும் இரண்டு புதுமுகங்கள்
இந்த படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளம் இருந்தாலும் ஏராளமான புதுமுகங்கள் ஆடிசன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். அவர்களில் கணேஷ் மற்றும் தஸ்ரதி என்ற இருவரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இயக்குனர் மகிழ்திருமேனி கூறும்போது “கணேஷ் மற்றும் தஸ்ரதியின் கதாபாத்திரங்கள் சிறியதாக இருந்தாலும் படத்தின் கதைக்கு முக்கியமானவை. அதனால், ஆடிஷன் மூலம் திறமையான நபர்களைத் தேர்ந்தெடுத்தோம். அனைத்து நடிகர்களுக்கும் உரிய அங்கீகாரம் கிடைப்பதை உறுதி செய்வதில் அஜித்தும் ஆர்வம் காட்டி வருகிறார்.
அதனால்தான் அவர்களுக்கென தனிப்பட்ட கேரக்டர் போஸ்டர்களை வெளியிடும் யோசனையை அவர் முன்மொழிந்தார். வளர்ந்து வரும் நடிகர்களான கணேஷ் மற்றும் தஸ்ரதி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அஜித்திடம் இருந்து பாராட்டுக்களை வாங்கினார்கள். படம் வெளியான பிறகு இவர்களின் நடிப்பு மக்களின் கவனத்தை ஈர்க்கும் என்பது உறுதி” என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!