பிளாஷ்பேக் : 10 வேடங்களில் நடித்த முதல் நடிகர்
செப் 23, 2024
Advertisement
நடிகர் திலகம் சிவாஜி "நவராத்திரி" படத்தில் 9 வேடத்தில் நடித்தார். கமல்ஹாசன் "தசாவதாரம்" படத்தில் 10 வேடத்தில் நடித்தார். ஆனால் இவர்களுக்கெல்லாம் முன்பே 1941ல் பி.யூ.சின்னப்பா "ஆர்யமாலா" என்ற படத்தில் 10 வேடங்களில் நடித்தார். இந்த படம் பெரிய வெற்றி பெற்றது.
இதில் சின்னப்பா ஜோடியாக எம்.எஸ்.சரோஜினி நடித்தார். இவர்களுடன் என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ்.பாலையா, டி.ஏ.மதுரம் உள்ளிட்டோர் நடித்தனர். பொம்மன் இரானி இயக்க, பக்ஷிராஜா பிலிம்ஸ் சார்பில் சின்னப்பாவே தயாரித்திருந்தார். காத்தவராயன், ஆர்யமாலாவின் புகழ்பெற்ற காதல் தான் படத்தின் கதை. பின்னர் மீண்டும் இதே படம் சிவாஜி நடிக்க "காத்தவராயன்" என்ற பெயரில் தயாராகி 1958ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது.
பி.யூ.சின்னப்பாதான் முதன் முறையாக "உத்தமபுத்திரன்" படத்தில் இரண்டு வேடங்களில் நடித்தார். "மங்கையர்கரசி" படத்தில் முதன் முறையாக 3 வேடங்களில் நடித்தார். இன்று பி.யூ.சின்னப்பாவின் 73வது நினைவுநாள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…