
புஷ்பா 2 ரிலீஸ், மீண்டும் உறுதி செய்த படக்குழு
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இப்படம் குறித்து பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகின. இயக்குனர் சுகுமார், படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நின்று விட்டது என்றும் செய்திகள் வெளியாகின. அதனால், படம் அடுத்த வருடத்திற்குக் கூட தள்ளிப் போக வாய்ப்பிருக்கிறது என்றார்கள்.
இதனிடையே, சற்று முன் படம் பற்றிய புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டார்கள். படம் வெளியாக இன்னும் 75 நாட்கள் இருக்கிறது என்பதற்கான அறிவிப்பு அது. இதன் மூலம் பட வெளியீடு குறித்து மீண்டும் உறுதி செய்துள்ளது படக்குழு.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!