
40லேயே இப்படி ஒரு முடிவு எடுத்து ஆச்சர்யப்படுத்தும் துல்கர் சல்மான்
ஆக 14, 2023
Advertisement
மலையாள நடிகர் மம்முட்டியின் வாரிசு துல்கர் சல்மான். வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து இந்திய அளவில் நடித்து அசத்தி வருகிறார். இவர் நடித்துள்ள ‛கிங் ஆப் கோதா" படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாக உள்ளது. இந்த பட புரொமோஷனில் பேசிய துல்கர், ‛‛நான் தற்போது 40 வயதை நெருங்கி வருகிறேன். இனி அடுத்த 10 ஆண்டுகளில் ரொமான்ஸ் ஹீரோவாக நடிக்க முடியாது. அடுத்தக்கட்டத்திற்கு செல்ல நினைக்கிறேன். முதிர்ச்சியான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன். கிங் ஆப் கோதா படத்தில் ஆக் ஷன் வேடத்தில் நடித்துள்ளேன். இதில் நடிப்பது கடினமானது. அதை சுவாரஸ்யமாக உருவாக்கி உள்ளனர்"" என்றார்.
இவரது தந்தை உட்பட 60 வயதை கடந்த ஹீரோக்களே ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் செய்து வரும் நிலையில் இவரோ அப்படி நடிக்க மாட்டேன் என கூறியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவரது தந்தை உட்பட 60 வயதை கடந்த ஹீரோக்களே ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் செய்து வரும் நிலையில் இவரோ அப்படி நடிக்க மாட்டேன் என கூறியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…