
திரிஷ்யம் 3 : முதல் நாள் வசூல் 50 கோடி
இப்படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வெளியீட்டிற்கு முன்பாக முன்பதிவு நன்றாகவே இருந்தது. கேரளாவில் மட்டும் முதல் நாள் வசூலாக 11 கோடிக்கும் சற்றே கூடுதலாக வசூலித்துள்ளது என்கிறார்கள்.
மலையாளத் திரைப்படங்களைப் பொறுத்தவரையில் முதல் நாள் வசூலாக "எல் 2 எம்புரான்" படம் 68 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ளது. தற்போது 50 கோடி வசூலித்துள்ள "திரிஷ்யம் 3" இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 3வது இடத்தில் மாதத் துவக்கத்தில் மோகன்லால், மம்முட்டி நடித்து வெளிவந்த "பேட்ரியாட்" படம் 28 கோடி வசூலுடனும், 4வது இடத்தில் மோகன்லால் நடித்த "மரக்கார்" படம் 20 கோடி வசூலுடனும், துல்கர் சல்மான் நடித்த "குருப்" படம் 18 கோடியுடன் 5வது இடத்திலும் உள்ளன.
முதல் நான்கு இடங்களில் மோகன்லால் நடித்த படங்கள் இருப்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!