
டிராகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஜன 16, 2025
Advertisement
"ஓ மை கடவுளே" பட இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்துவின் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் "டிராகன்" என்கிற படத்தில் நடித்து வருகின்றார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கின்றார். இதில் நாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன், கயடு லோகர் ஆகியோர் நடிக்க முக்கிய வேடங்களில் மிஷ்கின், கவுதம் மேனன், வி.ஜே.சிந்து, ஷர்சத் கான் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். காதல் கலந்த கலகலப்பான படமாக உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் வருகின்ற பிப்ரவரி 14ந் தேதி காதலர் தினத்தன்று இத்திரைப்படம் திரைக்கு வருவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!