தனுஷின் கேப்டன் மில்லர் முதல் பார்வையின் சாதனை
ஜூலை 01, 2023
யு டியூப் தளங்களில் எந்த டீசருக்கு, டிரைலருக்கு அதிகப் பார்வைகள் கிடைத்தது, அதிக லைக்குகள் கிடைத்தது என்பது மட்டும் நடிகர்களின் ரசிகர்களால் கொண்டாடப்படுவதில்லை. சமூக வலைத்தளங்களில் ஏதாவது சாதனை படைத்தால் கூட அதைக் கொண்டாடி வருகிறார்கள்.
அந்த வகையில் நேற்று வெளியான, தனுஷ் நடிக்க அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் "கேப்டன் மில்லர்" படத்தின் முதல் பார்வை தனுஷ் படங்களில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. அவர் நடித்து இதற்கு முன்பு வெளியான "கர்ணன்" படத்தின் முதல் பார்வை 24 மணி நேரத்தில் 80 ஆயிரம் லைக்குகளைப் பெற்றது. நேற்று வெளியான "கேப்டன் மில்லர்" படத்தின் முதல் பார்வை, தனுஷின் டுவிட்டர் கணக்கில், 20 மணி நேரத்திலேயே 97 ஆயிரம் லைக்குகளைக் கடந்துள்ளது. 24 மணி நேரம் முடிய இன்னும் நேரம் உள்ள நிலையில் அந்த லைக்குகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம்.
தமிழ் சினிமாவில் டுவிட்டர் தளத்தில் அதிக லைக்குகளைப் பெற்ற முதல் பார்வை என்ற சாதனையை விஜய்யின் "லியோ" போஸ்டர் படைத்தது. விஜய்யின் டுவிட்டர் தளத்தில் பதிவிடப்பட்ட அப்படத்தின் முதல் பார்வைக்கு 24 மணி நேரத்தில் 2,95,00 லைக்குகள் கிடைத்தது. கடந்த ஜுன் மாதம் 22ம் தேதி வெளியான அந்த போஸ்டர் தற்போது 3,19,000 லைக்குகளைக் கடந்துள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!