
ஜூலை வெளியீடுகளில் முக்கியமானவை எவை?
அடுத்த அரையாண்டில் சில முன்னணி நடிகர்களின் படங்கள் எதிர்பார்க்கப்படும் படங்களாக உள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் "ஜெயிலர்", செப்டம்பர் மாதத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் "சந்திரமுகி 2", அக்டோபர் மாதத்தில் விஜய் நடிக்கும் "லியோ", நவம்பர் மாதம் தீபாவளியை முன்னிட்டு "அயலான், ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ள படங்கள் இருக்கின்றன.
ஜூலை மாதத்தில் சில படங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களாக இருக்கின்றன. ஜூலை 14ல் சிவகார்த்திகேயன் நடிக்கும் "மாவீரன்", ஜூலை 21ல் விஜய் ஆண்டனி நடிக்கும் "கொலை", ஜூலை 28ல் விஷால், எஸ்ஜே சூர்யா நடிக்கும் "மார்க் ஆண்டனி" ஆகியவை முக்கியமான படங்களாக இருக்கும். இவை தவிர மேலும் பல சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாக உள்ளன. இந்த ஆண்டின் அடுத்த ஆறு மாதங்களுக்கான வெற்றியை ஜூலை மாதம் எந்தப் படம் பெரிய அளவில் ஆரம்பித்து வைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு திரையுலகத்தில் எழுந்துள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!