
அஜித்துக்கு பதிலாக தனுஷ் : எச்.வினோத் கொடுத்த புதிய அப்டேட்
துணிவு புரொமோஷன் நேர்காணலில் பேசிய எச்.வினோத், ""நேர்கொண்ட பார்வை படம் தொடங்குவதற்கு முன்பாகவே சதுரங்க வேட்டை படத்தின் பிரம்மாண்டமான வெர்ஷனை தான் அஜித்திடம் முதலில் கூறியிருந்தேன். அது ஹீரோ சப்ஜெக்ட்டாக இல்லாமல் காமன்மேன் கதையாக எழுதிருந்தேன். தற்போது அந்த கதையை தனுஷ் சாரிடம் சொன்ன பிறகு அவர் ஓக்கே சொல்லிவிட்டால் அது படமாக வரும்" என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தனுஷ் - எச்.வினோத் கூட்டணி பற்றிய செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்தப் படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அஜித்துக்காக எழுதப்பட்ட கதையில் தனுஷ் நடிக்கவுள்ளதாக வெளியான தகவல், ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…