
ரிலீசில் இருந்து தனுஷ் பின்வாங்கியது ஏன்? 3 காரணங்கள் சொல்லும் ஓம் தரப்பு
செப் 27, 2026
Advertisement
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், சாய்பல்லவி, மம்முட்டி நடிக்கும் "ஓம்" படம் அக்டோபர் 16ல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்போது அந்த ரிலீஸ் தேதியில் இருந்து பின் வாங்கி உள்ளார். ஏன் பின்வாங்கல் என சில காரணங்களை அடுக்கி இருந்தாலும் "ஓம்" பின்வாங்க 3 முக்கியமான காரணங்கள் உள்ளது என்கிறார்கள் அந்த படக்குழு தரப்பில்.
1) விரைவில் கட்சி, அரசியல், பதவி, பவர் என ஆசைப்படுகிறார் தனுஷ். அக்டோபர் 14ல் ரஜினியின் "ஜெயிலர் 2" ரிலீஸ் ஆகிறது. அதனால் ரஜினி படத்துக்கு போட்டியாக ஓம் படத்தை விட விரும்பவில்லை.
2) ஓம் படத்தை தனுஷ் சொந்தமாக தயாரிக்கிறார். ரஜினி படத்துடன் மோதி, இழப்பை சந்திக்க வேண்டாம் என நினைக்கிறார். தவிர ரஜினி படத்தை தயாரித்துள்ள அதே நிறுவனத்தில் சில படங்களில் தனுஷ் நடித்து இருக்கிறார். அந்த நட்பு அடிப்படையிலும் ஓம் பின்வாங்கியது.
3) உண்மையில் ஓம் பட பணிகள் முடியவில்லை. தனுசின் முந்தைய சில படங்கள் ஓடவில்லை. அதனால் ஓம் ரிலீசை தள்ளி வைத்துவிட்டார்.
இவற்றில் எது உண்மையான காரணமோ தெரியவில்லை. ஆனால் தீபாவளிக்கும் படம் ரிலீசாகாது என்பதால், பட வேலைகள் இன்னும் முடியவில்லை எனத் தெரிகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!