டிரெயினுக்கு ரிலீஸ் சிக்னல் கிடைச்சாச்சு... பிசாசு 2க்கு எப்போது
அக் 13, 2026
Advertisement
மிஷ்கின் இயக்கி முடித்துள்ள படங்கள் ‛பிசாசு" 2 மற்றும் ‛டிரெயின்". இந்த இரு படங்களுமே வெளியீட்டில் தொடர் தாமதமாகி வருகிறது. ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 படத்தை இயக்கி உள்ளார் மிஷ்கின். பிசாசு முதல்பாகத்தை விட இன்னும் ஹாரர் திரில்லராக இந்த படம் உருவாகி உள்ளது. ஆனால் படம் ரெடியாகி ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. ஆனால் இன்னும் வெளியாகவில்லை.
இந்த படம் ரிலீஸாவதில் தாமதம் ஏற்பட்டதால் டிரெயின் படத்திற்கு வந்தார் மிஷ்கின். விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், நாசர், கலையரசன் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். தாணு தயாரித்துள்ளார். மிஷ்கினே இசையும் அமைத்துள்ளார்.
ஒரே இரவில் ரயிலில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து டார்க் திரில்லர் படமாக உருவாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. இருப்பினும் ரிலீஸ் மட்டும் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இப்போது வருகிற டிச., 4ம் தேதி படம் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.
‛டிரெயின்" படத்திற்கு ரிலீஸ் சிக்னல் கிடைத்துவிட்டது. பிசாசு 2விற்கு எப்போது கிடைக்குமோ...!

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!