தனுஷ் 43 வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
ஜூலை 10, 2021
Advertisement
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் தனுஷின் 43வது படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு கடந்த வாரம் ஐதராபாத்தில் ஆரம்பமானது. படப்பிடிப்பு ஆரம்பமான சில நாட்களிலேயே படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் படத்திலிருந்து விலகிவிட்டதாக ஒரு தகவல் பரவியது. அது மட்டுமல்ல படத்தின் நாயகன் தனுஷ் படத்தை இயக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார் என்றும் சொன்னார்கள்.
அந்தத் தகவல் வதந்தி அளவிற்கு வேகமாகப் பரவியது. "ஜகமே தந்திரம்" கொடுத்த அடியால்தான் தனுஷ் இப்படி ஒரு முடிவெடுத்தார் என்றும் கோலிவுட்டில் பேச ஆரம்பித்தார்கள். ஆனால், அவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் சற்று முன் ஒரு டுவீட் செய்துள்ளது.
அதில் கார்த்திக் நரேன் சொல்வதை தனுஷ் கேட்பது போன்ற புகைப்படத்துடன் “டி 43 கடைசி கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது,” என்றும் குறிப்பிட்டு தனுஷையும், கார்த்திக் நரேனை மட்டும் "டேக்" செய்துள்ளார்கள்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!