
சமந்தா பட வசூல் ரூ.100 கோடி... ரூ.10 கோடிக்கே இன்னும் திணறும் அதர்வா
சமந்தா தமிழில் மட்டுமல்ல, தெலுங்கிலும் முன்னணி நடிகை ஆனார். அவர் நடித்த மெர்சல், தெறி, நான்ஈ, இரும்புதிரை உள்ளிட்ட படங்கள் ஹிட்டாகின. அவர் பாடல்கள் பிரபலம் ஆகின. அடுத்து இருவரும் இணைந்து நடிக்கவில்லை. கடந்த 16 ஆண்டுகளாக நடித்து வந்தாலும் ஒரு பெரிய ஹிட்டுக்காக போராடி வருகிறார் அதர்வா. அவர் சோலோ ஹீரோவாக நடித்த படங்கள் பெரிதாக ஓடவில்லை. ஆனால், நயன்தாராவுடன் நடித்த இமைக்காநொடிகள் 50 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியது. அவர் தம்பியாக நடித்த பராசக்தி 100 கோடிக்கு மேல் அள்ளியது. ஆனாலும் அந்த வெற்றியில் அவரால் பங்கு பெற முடியவில்லை அல்லது உரிமை கோர முடியவில்லை.
இந்நிலையில் சில வாரங்களுக்கு இடையில் அதர்வா, சமந்தா நடித்த படங்கள் வந்தன. ஹீரோயினுக்கு முக்கியத்துவள்ள மா இண்டி பங்காரம்(தமிழில் எங்கள் தங்கம்) படத்தில் நடித்தார் சமந்தா. அந்த படத்தின் வசூல் 100 கோடியை தாண்டியுள்ளது. இதனால் சந்தோஷத்தில் இருக்கிறார் சமந்தா. ஆனால், அதர்வா முரளி நடித்த இதயம் முரளி இன்னும் 10 கோடியை தாண்டவில்லை. படத்துக்கு பெரிய வரவேற்பு இல்லை என்று கூறப்படுகிறது.
ஒரே காலகட்டத்தில் அதர்வாவும், சமந்தாவும் அறிமுகம் ஆனாலும், இப்போது சமந்தா நிலை வேறு. ஆனால், இன்னமும் அதர்வா வெற்றிக்காக போராடிக் கொண்டு இருக்கிறார். அவர் நடித்த பரதேசி, ஈட்டி, 100 உள்ளிட்ட படங்கள் பேசப்பட்டாலும் அவரால் அதன்பிறகு ஹிட் கொடுக்க முடியவில்லை. தவறான கதை தேர்வு இல்லாதது, சரியான ஆட்கள் கூட இல்லாதது போன்ற காரணங்களால் அதர்வா தத்தளிக்கிறார். இப்படி தவித்த அருண் விஜய் பல ஆண்டுகள் கழித்து ஹிட் கொடுத்தார். இப்போது ஓரளவு இடத்தை பிடித்துவிட்டார். அதேப்போல் திறமைசாலி, புகாரில் சிக்காத அதர்வா வாழ்க்கையும் மாற வேண்டும். காலத்துக்கு ஏற்ப அதர்வாவும் மாற வேண்டும். கடவுள் அவருக்கு அருள வேண்டும் என அவருக்கு நெருக்கமானவர்கள், முரளியின் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!