
ஐதராபாத்தில் மீண்டும் வலிமை படப்பிடிப்பு
மே மாதம் 1ம் தேதி அஜித் பிறந்தநாளன்று வர வேண்டிய அப்டேட் கொரோனா தொற்று பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் அந்த அப்டேட்டை இன்னும் கொடுக்கவில்லை தயாரிப்பாளர்.
இதனிடையே, படத்தின் விடுபட்ட காட்சிகளை படமாக்க இன்று ஐதராபாத்தில் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகி உள்ளதாம். சில நாட்கள் மட்டும் அப்படப்பிடிப்பு நடக்குமாம். அதன்பிறகு கடைசி கட்டமாக எடுக்கப்பட வேண்டிய அந்த சண்டைக் காட்சியை படமாக்கவும் திட்டமிட்டுள்ளார்களாம்.
படப்பிடிப்பை முழுவதுமாக நடத்தி முடித்த பிறகுதான் "வலிமை அப்டேட்" கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. இருந்தாலும் ஜுலை 15ம் தேதி அந்த அப்டேட் வரும் என்ற தகவல் பரவியுள்ளது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!