இரண்டு பாகங்களாக வெளியாகும் தேவாரா
அக் 04, 2023
Advertisement
ஆச்சார்யா படத்தின் தோல்விக்குப் பிறகு கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகி வரும் படம் "தேவாரா". இதில் ஜான்வி கபூர் , சைப் அலி கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் அப்பா, மகன் என்று இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்கிறார்கள்.
தற்போது விறுவிறுப்பாக இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று இந்த படத்தின் இயக்குனர் கொரட்டலா சிவா, ‛‛தேவாரா திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகிறது. முதல் பாகம் ஏப்ரல் 5 2024 அன்று வெளியாகிறது. இது மறந்துப்போன கடற்பகுதி குறித்து பேசும் திரைப்படம். இதில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அழுத்தமாக இருக்கும். அதனால் இரண்டு பாகங்களாக உருவாக்கி வருகிறோம்"" என வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!