
இயக்குனர் ஜெயதேவி காலமானார்
65 வயதான ஜெயதேவி காரம்பாக்கத்தில் உள்ள சமயபுரம் நகரில் வசித்து வந்தார். முதுமை காரணமாக பல்வேறு உடல்நல பிரச்னைகளுக்கு சிகிச்சை பெற்று வந்தார். குறிப்பாக இதய பிரச்சினைக்காக சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் இன்றி நேற்று காலமானார். அவருக்கு தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இயக்குனர் வேலு பிரபாகரனை காதலித்து திருமணம் செய்து கொண்டு பின்னர் அவரை விவாகரத்து செய்தார் ஜெயதேவி. இவருக்கு குழந்தைகள் இல்லை. தனது அண்ணன் மகன் முத்துகுமாரை வளர்த்து வந்தார். கடைசியாக குஷ்பு, சுஹாசினி நடிப்பில் "ஆனந்த லீலை" என்ற படத்தை தயாரித்து, இயக்கி வந்தார். அந்த படம் வெளிவரவில்லை.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!