
வெற்றி விழா நடத்துறாங்க : வசூலை சொல்ல மறுக்குறாங்க...
மீசைய முறுக்கு 2 படம் 50 கோடியை தாண்டிவிட்டது. அன்பில் அவன் லாபத்தை நோக்கி செல்கிறது. டோரதி பிக்அப் ஆகிவிட்டது. பத்தா படத்துக்கும் நல்ல வசூல் என்று தகவல் வந்தாலும், உண்மையில் படத்தின் பட்ஜெட் எவ்வளவு, செலவு எவ்வளவு, வசூல் எவ்வளவு, வியாபாரம் எவ்வளவு? இந்த படங்கள் வெற்றிகரமான படங்களா? என தெரியாமல் ரசிகர்களும், சினிமாகாரர்களும் தவிக்கிறார்கள்.
சமீபத்தில் வந்த படங்களில் மண்டாடி மட்டுமே 150 கோடி வசூலை தாண்டியதாக படக்குழு அறிவித்தது. அந்த படமே நல்ல லாபம் என்று கூறப்படுகிறது. மற்ற படங்களின் நிலவரம் ஓகே என்றாலும் உண்மை நிலவரம் பலருக்கும் பிடிபடவில்லை. கடந்த வார படங்களில் சிக்மா, ஏழு கடல் ஏழு மலை படத்துக்கு வரவேற்பு இல்லை.இன்று பருந்து, ஆல்பாஸ், தாய் நிலம், ஈ1, உட்பட சில படங்கள் வருகின்றன. எந்த படத்துக்கும் வரவேற்பு இல்லை.
பெரிய படங்களாக வெளியான துல்கரின் ஐ ஆம் கேம், நானியின் தி பாரடைஸ், கார்த்தியின் சர்தார் 2 ஹிட்டாகவில்லை. பஹத் பாசலின் டோன்ட் டிரபிள் த டிரபிள் படமும் பெரிய லாபத்தை அள்ளவில்லை. லெனின்பாண்டியன், பாரிஸ்கபே, கோல்ட்கால், பீப் ஓடவில்லை. சின்ன படங்களில் டார்க் ஹெவன் மட்டும் ஓகே ரகம். ஜி.வி.பிரகாசின் இம்மார்ட்டல் ஓடியதா? லாபமா என யாருக்கும் தெரியவில்லை.
மலையாள படமான பெத்லகேம் குடும்ப யூனிட் பெரிய வெற்றி படமானது. ஆகஸ்ட் மாதம் வந்த டாக்சிக் படமும் படுதோல்வி. மொத ராத்திரி ஹிட், இருமுடிக்கும் வரவேற்பு. சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வெற்றி பெற்றது. விஷாலின் மகுடம் தோல்வி. மாதவனின் ஜிடி நாயுடு ஓடவில்லை. லோகேசின் டிசி ஹிட், கவினின் ஹாய் படம் சுமார் ரகம் இப்படியாக கடந்த சில மாதங்களின் வசூல் நிலவரம் இருக்கிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!